ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் கொண்டு வரப்படும் எதுவும் கேரளாவில் செயல்படுத்தப்படாது - பினராயி விஜயன்

ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் கொண்டு வரப்படும் எதுவும் கேரளாவில் செயல்படுத்தப்படாது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் கொண்டு வரப்படும் எதுவும் கேரளாவில் செயல்படுத்தப்படாது - பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), குடிமக்களின் தேசிய பதிவு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) ஆகியவற்றை இடதுசாரி அரசு ஒருபோதும் செயல்படுத்தாது என்று சி.ஏ.ஏ எதிர்ப்பு பேரணியின் போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், என்.ஆர்.சி குறித்து விவாதிக்கப்படவில்லை என பிரதமர் மோடி கூறும் போது, என்.ஆர்.சி. நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறுகிறார். நாட்டில் எந்தவொரு சட்டமும் அரசியலமைப்பு ரீதியாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் கொண்டு வரப்படும் எதுவும் கேரளாவில் செயல்படுத்தப்படாது என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com