

புதுடெல்லி,
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டேவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய ஒருவர் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாக்பூரை சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகடெமியில் பயின்றவர் ஆவார். மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிகோபார் பிரிவு தளபதியாகவும் பணியாற்றியவர்.
தற்போது ராணுவ தளபதியாக உள்ள எம்.எம் நரவனேவின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, 29-ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.