மத்திய பிரதேசம்: அரசு சட்ட கல்லூரியில் மாணவிகள் நெற்றியில் பொட்டு வைக்க தடை

மத்திய பிரதேசத்தில் அரசு சட்ட கல்லூரியில் மாணவிகள் நெற்றியில் பொட்டு வைக்க அறிவிக்கப்படாத தடை அமலில் உள்ளது.
மத்திய பிரதேசம்: அரசு சட்ட கல்லூரியில் மாணவிகள் நெற்றியில் பொட்டு வைக்க தடை
Published on

இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் நெற்றியில் பொட்டு வைத்து சென்ற மாணவிகள் சிலரிடம் நேற்று கல்லூரி வளாகத்தில் திலகம் வைத்து விட்டு வரக்கூடாது என கூறப்பட்டு உள்ளது.

ஒருவேளை திலகம் வைத்து மாணவிகள் சென்றாலும், பேராசிரியர்கள் அதனை அழித்து விடுவார்கள் என அவர்கள் கூறியுள்ளனர். பேராசிரியர்கள் தங்களுக்கு இன்டர்னெல் எனப்படும் மதிப்பெண்களை முடிவு செய்யும் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்றும் தெரிவித்தனர்.

இதனால், ஆசிரியர்கள் கூறுகின்றனர் என்பதற்காக நெற்றியில் திலகம் எதுவும் வைக்காமல் நாங்கள் செல்கிறோம் என பெயர் வெளியிட விருப்பம் இல்லாத ஒரு மாணவி கூறியுள்ளார்.

இதனால், திலகம் வைக்க அரசு சட்ட கல்லூரியில் அறிவிக்கப்படாத தடை அமலில் உள்ளது என கூறப்படுகிறது.

கல்லூரியில் எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.எம். தேர்வுகள் நடைபெறும்போது, அதற்காக வரும் மாணவிகளையும் நெற்றியில் திலகம் எதுவும் வைக்க கூடாது என கல்லூரி பேராசிரியர்கள் கூறி விடுகின்றனர் என்றும் அந்த மாணவி கூறியுள்ளார்.

இந்த அறிவிக்கப்படாத தடை பற்றி விசாரணை குழு உறுப்பினர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. மதம் சார்ந்த அடிப்படைவாதம் பரப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com