மகாராஷ்டிரா: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி

மஹாராஷ்டிராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பேர் பலியாயினர்.
மகாராஷ்டிரா: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி
Published on

பால்கர்,

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சாரில் ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொல்வாடே கிராமத்தில் ஆங்க் பார்மா என்ற நிறுவனம் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்.ஐ.டி.சி) பகுதியில் அமைந்துள்ளது. இன்று மாலை 7.20 மணியளவில் சில இரசாயனங்கள் பரிசோதனையின்போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயில் சிக்கி 8 பேர் பலியானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com