

மும்பை,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் நேற்று வரை 7 ஆயிரத்து 900 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மும்பையை சேர்ந்த முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்ததாக அரசு அறிவித்துள்ளது.
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், மராட்டிய மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அவசியமற்ற பயணங்களை தவிர்த்து விட வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் இருக்கிறோம் என்று தெரிவித்த உத்தவ் தாக்கரே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இல்லை.எனினும், கவலைப்படும் வகையில் உள்ளது என்றார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசித்ததாகவும் உத்தவ் தாக்ரே தெரிவித்தார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் உறுதி அளித்ததாகவும் உத்தவ் தாக்கரே கூறினார்.