மேக் இன் இந்தியா; இந்திய கடலோர காவல் படை கப்பல் வீடியோ கான்பரென்ஸ் வழியே இயக்கம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரான இந்திய கடலோர காவல் படை கப்பல் சி-452 வீடியோ கான்பரென்ஸ் வழியே இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
மேக் இன் இந்தியா; இந்திய கடலோர காவல் படை கப்பல் வீடியோ கான்பரென்ஸ் வழியே இயக்கம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் பொருட்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் நாட்டின் பாதுகாப்பு படைக்கு தேவையான பொருட்களின் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், புதிய கண்டுபிடிப்புகள், உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகுதல், தொழில் வளம் உள்ளிட்டவை மேம்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கடல்வழி பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கப்பல்களை வடிவமைக்கும் பணியும் உள்நாட்டிலேயே நடந்து வருகிறது. இதன்படி, எல் அண்டு டி சூரத் நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட இந்திய கடலோர காவல் படை கப்பல் சி-452 ஆனது இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

இதனை கடலோர காவல் படை தளபதி (மேற்கு மண்டலம்) ராஜன் பர்கோத்ரா ரத்னகிரியில் வீடியோ கான்பரென்ஸ் வழியே இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com