துர்கா பூஜை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
துர்கா பூஜை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா

மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில், ஆண்டுதோறும் துர்க்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்கென தனியே துர்க்கா பூஜை கமிட்டிகளும் இயங்கி வருகிறது. திருவிழா போல் நடைபெறும் இந்த பண்டிகைக்காக மேற்கு வங்கத்தில், அம்மாநில அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், துர்க்கா பூஜை பண்டிகையின் போது செலவாகும் பணம் மற்றும் அதன் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய கடந்த வாரம் துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான மத்திய அரசு, துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு வருமானவரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அளிக்கும் நிதியில் இந்த விழா நடத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், அதற்கு வருமான வரி வசூலிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com