

பாலி,
ராஜஸ்தானின் பாலி நகரை சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் பயணிகளோடு பயணியாக உடன் செல்வார். அவர்களுக்கு மயக்கம் தரும் உணவு பொருட்களை தின்பதற்கு கொடுத்து பின்னர் அவர்களது உடைமைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுவார்.
இதுபோன்று 11 கொள்ளை சம்பவங்களில் அவர் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குஜராத்தின் வதோதரா நகர ரெயில்வே போலீசார் அந்நபரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.