உத்தரபிரதேசத்தில் மேனகா, வருண் காந்தி மீண்டும் போட்டி: 29 பேர் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. இதில் உத்தர பிரதேசத்தில் 29 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசத்தில் மேனகா, வருண் காந்தி மீண்டும் போட்டி: 29 பேர் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது
Published on

புதுடெல்லி,

மத்திய மந்திரி மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியிலும், அவருடைய மகனும், தற்போதைய எம்.பி.யுமான வருண் காந்தி பிலிப்பிட் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தாயும், மகனும் நடைபெற உள்ள தேர்தலில் தங்கள் தொகுதிகளை மாற்றிக்கொண்டனர். அதாவது 2014-ம் ஆண்டு தேர்தலில் வருண் காந்தி சுல்தான்பூர் தொகுதியிலும், மேனகா காந்தி பிலிப்பிட் தொகுதியிலும் போட்டியிட்டனர்.

மற்றொரு மத்திய மந்திரி மனோஜ் சின்கா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற காஜியாப்பூர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் இணைந்தவரும், உத்தரபிரதேச மாநில மந்திரியுமான ரீட்டா பகுகுணா ஜோஷி அலகாபாத் தொகுதியிலும், மற்றொரு மாநில மந்திரி சத்யதேவ் பச்சோரி கான்பூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியில் இருந்து விலகி நேற்று காலையில் பா.ஜனதாவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு ராம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஆனால் கான்பூர் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு இந்த தேர்தலில் சீட் மறுக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் போட்டியிடும் 10 பா.ஜனதா வேட்பாளர்களின் பெயரும் நேற்று அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com