

புனே,
மராட்டியத்தின் புனே நகரில் உருளி கஞ்சன் பகுதியில் மணல் கடத்தல் தொழில் நடந்து வருகிறது. இதில் இரு குழுக்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று (வெள்ளி கிழமை) மதியம் 2.30 மணியளவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஒருவரையொருவர் துப்பாக்கிகளால் சுட்டு கொண்டனர்.
இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழப்பதற்கு முன் எதிரி குழுவை சேர்ந்த ஒருவரை சுட்டு கொன்றுள்ளார். இதுதவிர, 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
மோதலில் உயிரிழந்த இருவரின் பெயர்களும் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன், எதிரிகளும் ஆவர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.