பணத்தகராறு: வங்காளதேச பெண்ணை இந்தியாவுக்கு கடத்தி, பாலியல் வன்கொடுமை

வங்காளதேச பெண்ணை பணத்தகராறில் இந்தியாவுக்கு கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 2 பெண் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவானது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ராமமூர்த்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் போலீசாருக்கு கிடைத்த வீடியோவின் அடிப்படையிலும், முதற்கட்ட விசாரணையிலும் 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று, பாதிக்கப்பட்ட பெண்ணை தேடுவதற்காக அண்டை மாநிலத்திற்கு போலீசார் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்க போலீசார் முடிவு செய்துள்ளனர் என பெங்களூரு நகர காவல் ஆணையாளர் கமல் பன்ட் கூறியுள்ளார்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, 6 பேரும் வங்காளதேசத்தில் இருந்த ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்.

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அந்த பெண்ணை அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்து, கொடுமைப்படுத்தி, அடித்து உதைத்து உள்ளனர். மூத்த அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் முழு அளவில் விசாரணை நடத்தப்படுகிறது என்று கமல் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com