

புதுடெல்லி,
கெரேனா காலத்திலும் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக பிரதமர் மேடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய எரிசக்தி மாநாட்டை துவக்கி வைத்து, காணொலி காட்சி வாயிலாக சர்வதேச எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், உலகிலேயே எரிசக்தியை அதிகம் உபயோகிக்கும் நாடாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார்.
மேலும் சூரிய பகவானின் ரதத்தை இயக்கும் ஏழு குதிரைகளைப் போன்று, இந்தியாவின் எரிசக்தி ஏழு முக்கிய உந்து சக்திகளைக் கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.
1. எரிசக்தி-சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுவதற்கான நமது முயற்சிகளை வேகப்படுத்துதல்
2. குறிப்பாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி போன்ற தொல்படிம எரிபொருட்களின் தூய்மையான பயன்பாடு
3. உயிரி-எரிபொருட்களுக்கு ஊக்கமளிப்பதற்காக உள்நாட்டு ஆதாரங்களின் மீது அதிக சார்பு
4. 450 ஜிகாவாட் என்னும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 2030-க்குள் எட்டுதல்
5. போக்குவரத்தை கார்பன் மயத்தில் இருந்து குறைப்பதற்காக மின்சாரத்தின் பங்களிப்பை அதிகப்படுத்துதல்
6. ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் எரிசக்திகளை நோக்கி முன்னேறுதல்
7. அனைத்து எரிசக்தி அமைப்புகளிலும் டிஜிட்டல் புதுமைகள்
கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக அமலில் இருக்கும் துடிப்பான எரிசக்தி கொள்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.