கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் பெயரை கூறி, சக உறுப்பினர்களுடனான பேச்சை சீக்கிரம் முடித்து கொள்ளுங்கள் என பிர்லா கூறினார்.
கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்
Published on

புதுடெல்லி,

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான உறவை வலுப்படுத்திய ஜியாவின் பங்கு எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என அவையில் பிர்லா குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது, விமான விபத்தில் நேற்று உயிரிழந்த, மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்து கொண்டார்.

அவருடைய உரையின் நகல்கள் மக்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. இதன்பின்னர், மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார், வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் சமீபத்தில் மறைந்த மக்களவையின் முன்னாள் உறுப்பினர்கள் ஷாலினி பாட்டீல், பானு பிரகாஷ் மிர்தா, சத்யேந்திர நாத் புரோமோ சவுத்ரி, சுரேஷ் கல்மாடி மற்றும் கபீந்திர புர்கயஸ்தா ஆகிய 5 பேருக்கும் அவையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.

இதனை மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா வாசித்து முடித்ததும் நாள் முழுமைக்கும் அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அப்போது, இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான உறவை வலுப்படுத்திய ஜியாவின் பங்கு எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என அவையில் பிர்லா குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மக்களவையில் இன்று 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. இதில், கேள்வி நேரத்தின்போது, எம்.பி.க்கள் சக உறுப்பினர்களுடன் தொடர்ந்து பேசியபடி இருந்தனர். இதனால், அவர்களை வெளியே போகும்படி மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

அவர் கூறும்போது, நான் பார்த்து கொண்டே இருக்கிறேன். உறுப்பினர்கள் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் பேசி கொண்டே இருக்கின்றனர். அது மற்றவர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இது அவையின் கண்ணியத்திற்கு எதிரான அணுகுமுறை.

அப்படி அவர்கள் நீண்டநேரம் விவாதிக்க வேண்டும் என விரும்பினால், மக்களவை அறையில் இருந்து வெளியேறலாம் என்றார். குறுகிய நேரம் பேசி முடித்து கொள்வதற்கு அவையில் அனுமதி அளிக்கப்படும். ஆனால், நீண்ட நேரம் பேச அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.

இனி, அவையில் இடையூறு ஏற்படுத்த கூடிய உறுப்பினர்களின் பெயர்களை நான் குறிப்பிடுவேன் என கூறிய பிர்லா, காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் பெயரை கூறி, சக உறுப்பினர்களுடனான பேச்சை சீக்கிரம் முடித்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com