என் வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல... மகனின் உருக்கமான பேச்சை கேட்டு கண்கலங்கிய முகேஷ் அம்பானி

திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது.
என் வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல... மகனின் உருக்கமான பேச்சை கேட்டு கண்கலங்கிய முகேஷ் அம்பானி
Published on

அகமதாபாத்,

தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சாண்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. ஜாம் நகரில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி விருந்தினர்கள் முன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

தனக்காக தன்னுடைய குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களை செய்துள்ளனர். என்னுடைய வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல. முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன். சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் என்னை விடவில்லை. எப்போதும் எனக்கு முழு ஆதரவு அளித்தார்கள் என உருக்கமாக கூறினார்.

ஆனந்த் அம்பானியின் பேச்சை கேட்டதும் முகேஷ் அம்பானி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். முகேஷ் அம்பானி தேம்பி அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

முன்னதாக நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், ஆனந்த் அம்பானியின் தந்தையுமான முகேஷ் அம்பானி, உருக்கமான உரையை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்களை வரவேற்ற முகேஷ் அம்பானி, ஆனந்த் மற்றும் ராதிகா தம்பதியருக்கு ஆசியை வழங்கக்கோரி கேட்டுகொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com