என் சி இ ஆர் டி புத்தகங்கள் வாங்குவதற்கு புதிய இணையதளம்

என் சி இ ஆர் டி புத்தகங்களை வாங்குவதற்கு புதிய இணையதளத்தை அந்நிறுவனம் துவங்கியுள்ளது.
என் சி இ ஆர் டி புத்தகங்கள் வாங்குவதற்கு புதிய இணையதளம்
Published on

புதுடெல்லி

இனி பெற்றோர் புத்தகங்களை வீட்டிற்கே வரவழைக்க முடியும். அதே போல பள்ளிகளும் இந்தப் புதிய இணையதளத்தில் புத்தகங்களை வாங்கலாம். எனினும் புத்தகங்களை வாங்கும் போது உடனடியாக பணம் கட்ட வேண்டாம். இப்புத்தகங்கள் தேவையான அளவிற்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்துகிறது இத்தளம். இது தவிர பள்ளிகள் அவரவர் நகரங்களிலும் உள்ள என் சி இ ஆர் டி விற்பனையாளர்களிடமும் வாங்கிக் கொள்ளலாம்.

புத்தகத்தை அஞ்சலில் பெறுவதற்கு சாதாரண கட்டணம் போதும் என்கிறார் ஒரு அதிகாரி. பல நேரங்களில் இப்புத்தகங்கள் போதுமான அளவிற்கு வெளியில் கிடைக்காமல் போகும் போது தனியார் வெளியிடும் புத்தகங்களை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கிறது என்று பரவலாக குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால் என் சி இ ஆர் டி அதிகாரிகளோ ஒவ்வொரு பள்ளியும் தங்களுக்கு எவ்வளவு புத்தகம் தேவை என்பதை முன்கூட்டியே சொல்லி விட்டால் அவற்றின் அளிப்பை உறுதி செய்ய முடியும் என்கின்றனர்.

இதனிடையே என் சி இ ஆர் டி புத்தகங்களை பயன்படுத்தும் சி பி எஸ் இ தனது பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் 19,000 பள்ளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் புதிய இணைய தளத்தில் புத்தகங்களை வாங்கச் சொல்லியிருக்கிறது. இதன் மூலம் தேவையான் அளவிற்கு புத்தகங்களை பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com