தனது வீட்டு முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு-சித்தராமையாவிடம் பக்கத்து வீட்டுகாரர் புகார்

தனது வீட்டு முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு ஏற்படுகிறது என்று பக்கத்து வீட்டுகாரர் சித்தராமையவிடம் புகார் அளித்துள்ளார்.
தனது வீட்டு முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு-சித்தராமையாவிடம் பக்கத்து வீட்டுகாரர் புகார்
Published on

ஐகிரவுண்ட்:-

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் சித்தராமையா பார்க்க தினமும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்களது வாகனங்களை முதல்-மந்திரி பங்களா அருகில் உள்ள பக்கத்துவீட்டு முன்பு நிறுத்தி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பக்கத்துவீட்டில் வசிப்போர் வீட்டில் இருந்து வெளியே வரவும், உள்ளே செல்லவும் சிரமப்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சித்தராமையா, தனது அரசு பங்களாவில் இருந்து காரில் வெளியே புறப்பட்டு வந்தார். அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்த நபர் திடீரென்று ஓடி வந்து, சித்தராமையா பயணம் செய்த காரை தடுத்து நிறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே டிரைவரும் காரை நிறுத்தினார். பின்னர் அந்த நபர், தான் உங்கள் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர். உங்களை பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் வாகனங்களை எனது வீட்டு முன்பு நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் எங்கள் குடும்பத்தினர் சிரமப்பட்டு வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சித்தராமையாவிடம் கூறினார். இதை கேட்டறிந்த சித்தராமையா, இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com