புதுடெல்லி, அகமதாபாத், மும்பை ரெயில் நிலையங்கள் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு

Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

புதுடெல்லி:

புதுடெல்லி, அகமதாபாத் ரெயில்நிலையங்கள் மற்றும் மும்பை ரயில் நிலையத்தின் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தை சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மறுசீரமைக்க வேண்டும் என்ற இந்திய ரயில்வே பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சரவையின் இன்றைய முடிவு ரயில் நிலையங்களின் மறு சீரமைப்புக்கு புதிய வழியை ஏற்படுத்தியுள்ளது. நாள் ஒன்றுக்கு 50 லட்சம் பேர் பயணிக்கும் 199 ரயில் நிலையங்கள் முதல் கட்டமாக மறுவடிவமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.199 நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 47 நிலையங்களில் ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. 32 நிலையங்களில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com