டெல்லி: ஏப்ரலில் இதுவரை இல்லாத வகையில் ரூ.2,898 கோடி ஜி.எஸ்.டி. வசூல்

டெல்லியில் ஏப்ரலில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவாக ரூ.2,898 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி: ஏப்ரலில் இதுவரை இல்லாத வகையில் ரூ.2,898 கோடி ஜி.எஸ்.டி. வசூல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டது.

அந்த சூழலில் இருந்து மெல்ல மீண்டு வருவதற்குள் 3 கொரோனா அலைகள் நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்று விட்டது.

இந்நிலையில், கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரலில் டெல்லியில் ரூ.320 கோடி அளவுக்கே ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டது. இது 2021-22ம் ஆண்டு ஏப்ரலில் ரூ.2,325 ஆக இருந்தது.

ஆனால், நடப்பு 2022-23ம் நிதியாண்டில் இந்த அளவு கூடியுள்ளது. டெல்லியில் ஏப்ரலில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவாக ரூ.2,898 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதனால், பொருளாதார மீட்சி நிலை டெல்லியில் விரைவாக நடந்து வருகிறது என்பதற்கான அடையாளம் இந்த ஜி.எஸ்.டி. வசூலில் இருந்து அறியப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com