புதிதாக 9,579 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 52 பேர் பலி - சுகாதாரத்துறை தகவல்

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 52 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 9,579 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புதிதாக 9,579 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 52 பேர் பலி - சுகாதாரத்துறை தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 16 ஆயிரத்து 165 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 9,579 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 74 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 52 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 2,767 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 85 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது. 470 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 985 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 6,387 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 55 பேர், பல்லாரியில் 132 பேர், பெலகாவியில் 39 பேர், பெங்களூரு புறநகரில் 192 பேர், பீதரில் 465 பேர், சாம்ராஜ்நகரில் 39 பேர், சிக்பள்ளாப்பூரில் 120 பேர், சிக்கமகளூருவில் 57 பேர், சித்ரதுர்காவில் 22 பேர், தட்சிண கன்னடாவில் 73 பேர், தாவணகெரேயில் 40 பேர், தார்வாரில் 91 பேர், கதக்கில் 29 பேர், ஹாசனில் 113 பேர், ஹாவேரியில் 36 பேர், கலபுரகியில் 335 பேர், குடகில் 24 பேர், கோலாரில் 96 பேர், கொப்பலில் 31 பேர், மண்டியாவில் 86 பேர், மைசூருவில் 362 பேர், ராய்ச்சூரில் 70 பேர், ராமநகரில் 64 பேர், சிவமொக்காவில் 43 பேர், துமகூருவில் 239 பேர், உடுப்பியில் 101 பேர், உத்தரகன்னடாவில் 64 பேர், விஜயாப்புராவில் 122 பேர், யாதகிரியில் 52 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 40 பேர், மைசூருவில் 3 பேர், பீதர், சாம்ராஜ்நகரில் தலா 2 பேர், பாகல்கோட்டை, பெலகாவி, பல்லாரி, சிக்பள்ளாப்பூர், ராமநகரில் தலா ஒருவர் என மொத்தம் 52 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com