டெல்லியில் வருகிற 26-ம் தேதி வரை விமான சேவைகள் நிறுத்தம்

பயணிகள் தங்களின் மாற்றியமைக்கப்பட்ட விமான நேரத்தை விமான நிறுவனங்களில் தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் வருகிற 26-ம் தேதி வரை விமான சேவைகள் நிறுத்தம்
Published on

புதுடெல்லி,

டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களுக்கு தரையிறங்க மற்றும் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 10.20 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு நாளின் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தங்களின் மாற்றியமைக்கப்பட்ட விமான நேரத்தை விமான நிறுவனங்களில் தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜன.26 காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை டெல்லி விமான நிலையத்தில் எந்தவித விமான சேவையும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ விமானங்கள், எல்லை பாதுகாப்பு படை விமானங்கள், மாநில அரசின் முதல்-அமைச்சர்கள், கவர்னர்கள் பயன்படுத்தும் விமானங்கள்/ ஹெலிகாப்டர்களுக்கு இந்த தடை பொருந்தாது.

இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை அடுத்த வாரம் கொண்டாடவுள்ளது. இதில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். குடியரசு தின அணிவகுப்பில் கவுரவ விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஒருவர் கலந்து கொள்வது இது 6வது முறையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com