மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் இல்லை - மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் இல்லை என்று மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதில் அளித்த மத்திய அறிவியல், தொழில்நுட்பம் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் இதனை தெரிவித்து உள்ளார்.

நிர்வாகத்தை வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த பணித்திறனை மேம்படுத்தவும் டிஜிட்டல் மயமாக்கல், மின்-அலுவலகத்தை மேம்படுத்துதல், விதிகளை எளிமைப்படுத்துதல், காலமுறை பணியாளர் மறுசீரமைப்பு மற்றும் தேவையற்ற சட்டங்களை நீக்குதல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com