

புதுடெல்லி,
குரு பூர்ணிமாவை முன்னிட்டு, நாடாளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குருபூர்ணிமாவை முன்னிட்டு, மக்களவையில் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றஅலுவல்கள் நடைபெறாது என்று அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விடுமுறையை அறிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை மீண்டும் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.