"நான் உன் வேலைக்காரன் அல்ல" இண்டிகோ விமானப் பணிப்பெண்ணுக்கும் பயணிக்கும் இடையே கடும் மோதல்

விமானப் பயணி விமானப் பணிப்பெண்ணிடம் "நீங்கள் பயணியின் வேலைக்காரன்" என்று கூறுகிறார். அதற்கு அவர் "நான் ஒரு பணியாளர், உங்கள் வேலைக்காரன் அல்ல... என்று கூறுகிறார்.
"நான் உன் வேலைக்காரன் அல்ல" இண்டிகோ விமானப் பணிப்பெண்ணுக்கும் பயணிக்கும் இடையே கடும் மோதல்
Published on

புதுடெல்லி:

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6இ 12 விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. விமானத்தில் உணவைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக இண்டிகோ பயணிக்கும் விமானப் பணிப்பெண்ணுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

டிசம்பர் 16 அன்று விமானத்தில் நடந்த இந்த் மோதல் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது.

விமானப் பயணி விமானப் பணிப்பெண்ணிடம் "நீங்கள் பயணியின் வேலைக்காரன்" என்று கூறுகிறார். அதற்கு அவர் "நான் ஒரு பணியாளர், உங்கள் வேலைக்காரன் அல்ல... என்று கூறுகிறார்.

ஒரு கட்டத்தில், பயணி ஒருவர் "ஏன் கத்துகிறீர்கள்? வாயை மூடு" என்று விமானப் பணிப்பெண்ணிடம் கூறினார், ஆனால் பயணியை "வாயை மூடு" என்று விமானப் பணிப்பெண் கூறுகிறார்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மூத்த அதிகாரி ஒருவர், இந்த சம்பவம் குறித்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com