தாஜ் மகாலில் சூரிய உதயத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் நுழைவு சீட்டுகள் வழங்கப்படும்: மத்திய மந்திரி தகவல்

தாஜ் மகாலில் சுற்றுலாவாசிகளின் வசதிக்காக சூரிய உதயத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன் நுழைவு சீட்டுகள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. #TajMahal
தாஜ் மகாலில் சூரிய உதயத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் நுழைவு சீட்டுகள் வழங்கப்படும்: மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் தாஜ் மகால் அமைந்துள்ளது. தனது மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜகான் இதனை கட்டியுள்ளார். இங்கு வெளிநாடு சுற்றுலாவாசிகள் உள்பட பலர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கலாசார துறை இணை மந்திரி மகேஷ் சர்மா மக்களவையில் இன்று பேசும்பொழுது, தாஜ் மகாலின் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. டிக்கெட் வழங்கும் அறையானது, சூரிய உதயத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு திறக்கப்படும். சூரியன் மறைவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மூடப்படும். இதனால் சுற்றுலாவாசிகள் நீண்ட வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும்.

இதற்கு முன்பு தாஜ் மகாலுக்குள் நுழையும் கதவுகள் மற்றும் டிக்கெட் வழங்கும் அறைகள், சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவுக்கு இடைப்பட்ட நேரத்தில் திறக்கப்பட்டு வந்தது.

சீசன் காலங்களில் நாளொன்றுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை சுற்றுலாவாசிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com