இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #pmmodi | #ArmyDay
இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

நாடு விடுதலை பெற்ற பின்பு 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக கே.எம்.கரியப்பா பதவியேற்றார். நமது இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்நாட்டுக்காக ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்யும் நமது சரித்திர நாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாகவும் ராணுவ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய ராணுவ தினத்தில், ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டை காப்பதுடன், இயற்கை பேரிடர் மற்றும் விபத்துக்களின் போதும் மனிதநேயத்துடன் போராடுவதால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நமது ராணுவத்தின் மீது நம்பிக்கையும், பெருமையும் கொண்டுள்ளனர்.நமது ராணுவம் எப்போதும் நமது நாட்டை முதன்மைப்படுத்துகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் வணங்குகிறேன். இத்தகைய மதிப்பு மிக்க ஹீரோக்களை இந்தியா ஒருபோதும் மறவாது என்று தெரிவித்துள்ளார். #pmmodi | #ArmyDay

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com