

மேற்கு வங்கத்தில் உள்ள திகா எனும் பகுதியில் கடற்கரையோரம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, அங்கு சிலருக்கு இனிப்புகள் வழங்கியுள்ளார். அப்போது மம்தாவை நோக்கிச் சென்ற அம்மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை ஐ.ஜி.யான ராஜீவ் மிஸ்ரா என்பவர், மம்தாவின் பாதங்களைத் தொட்டு வணங்கியதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவரும் நிலையில், இவ்விவகாரம் விவாதமாகவும் மாறியுள்ளது.