ஒரே தேசம், ஒரே தேர்தல் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் சொல்வது என்ன?

பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கருத்து சமீபகாலமாக வலுத்து வருகிறது. #OneNationOnePoll
ஒரே தேசம், ஒரே தேர்தல் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் சொல்வது என்ன?
Published on

புதுடெல்லி,

அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இதற்கு ஒப்புதல் அளித்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் கமிஷனும் கூறியது.

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த நிதி ஆயோக் ஆதரவு தெரிவித்தது. ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டிற்கு மத்தியில் உள்ள பாரதீய ஜனதாவும் ஆதரவாக உள்ளது. இதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குமாறு பிரதமர் மோடி கூட்டணி கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். ஆனால் இது வெறும் வித்தை மட்டுமே, சாத்தியமில்லாதது என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறிஉள்ளார். இந்நிலையில் ஒரே தேசம், ஒரே தேர்தல் விவகாரத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தன்னுடைய கருத்தை தெரிவித்து உள்ளார்.

மிக நீண்ட நாட்களாகவே இந்த திட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவித்து வருகிறேன். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் தேர்தல் செலவுகள் குறையும், தேர்வு செய்யப்பட்ட அரசுக்களுக்கும் பணிபுரிய கூடுதல் கால அவகாசம் கிடைக்கும். அனைவரது ஆதரவுடன் இது நடைபெற வேண்டும், என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com