நாடு முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 11.42 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்றம் எனப்படும் ‘லோக் அதாலத்’ நடத்தப்படுகிறது. இந்த லோக் அதாலத், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு.லலித் வழிகாட்டுதலின்படி காணொலி முறையிலும், நேரடியாகவும் நடைபெற்றது.
நாடு முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 11.42 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு
Published on

32 மாநில சட்ட சேவைகள் ஆணையங்கள், ஐகோர்ட்டு சட்ட சேவைகள் ஆணையங்களில் லோக் அதாலத்தில் 35 லட்சத்து 53 ஆயிரத்து 717 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 11 லட்சத்து 42 ஆயிரத்து 415 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டன. இதன் விளைவாக, ரூ.86.71 கோடி அளவுக்கு தீர்வு தொகை அளிக்கப்பட்டது.

அடுத்த லோக் அதாலத் செப்டம்பர் 11-ந் தேதி நடைபெறும் என தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com