

புதுடெல்லி,
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் பற்றி சுற்றுலா துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த நவம்பரில் இந்தியா வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் எண்ணிக்கை 10.5 லட்சம் ஆக உள்ளது. இது கடந்த வருட நவம்பரில் 8.78 லட்சம் ஆக உள்ளது. கடந்த 2015ம் வருட நவம்பரில் இது 8.16 லட்சம் ஆக உள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்பொழுது, இந்த நவம்பரில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையில் 14.4 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று ஜனவரி முதல் நவம்பர் வரையிலான இந்த வருட வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 90.01 லட்சம் ஆக உள்ளது. இது கடந்த வருடத்தினை விட 15.6 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 77.83 லட்சம் ஆகும். இது கடந்த 2015ம் ஆண்டு எண்ணிக்கையை விட 9.4 சதவீதம் அதிகம் ஆகும்.
பெருமளவிலான சுற்றுலாவாசிகள் வங்காளதேசம் (16.77 சதவீதம்), அமெரிக்கா (14.77 சதவீதம்), இங்கிலாந்து (10.23 சதவீதம்), ரஷ்யா (4.41 சதவீதம்), கனடா (4.39 சதவீதம்), ஆஸ்திரேலியா (3.96 சதவீதம்) மற்றும் மலேசியா (3.50 சதவீதம்) ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.