

புதுடெல்லி,
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டின் கடந்த அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் (இ.பி.எப்.), தொழிலாளர் மாநில ஈட்டுறுதி கழகம் (இ.எஸ்.ஐ.) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்.) ஆகியவற்றின் சந்தாதாரர் விவரங்களை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்ற விவரமும் இடம் பெற்று உள்ளது.
அதன்படி இ.பி.எப். திட்டத்தில் 3 கோடியே 77 லட்சத்து, 53 ஆயிரத்து 459 பேரும், இ.எஸ்.ஐ. திட்டத்தில் 4 கோடியே 40 லட்சத்து 59 ஆயிரத்து 863 பேரும், என்.பி.எஸ். திட்டத்தில் 22 லட்சத்து 53 ஆயிரத்து 686 பேரும் புதிய சந்தாதாரர்களாக இணைந்து உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.