புதிய கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பலன் அளிக்கும் என தகவல்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வி.யு.ஐ. 202012/01 கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் கால் பதித்து வருகிறது.
புதிய கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பலன் அளிக்கும் என தகவல்
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வி.யு.ஐ. 202012/01 கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் கால் பதித்து வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள தடுப்பூசி, புதிய கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் என தெரியவந்துள்ளது.

இதுபற்றி அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாஸ்கல் சொரியட் கூறுகையில், வேகமாக பரவக்கூடிய புதிய கொரோனா வைரசுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசியைத்தான் கோவிஷீல்டு என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வினியோகிக்க உள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்த வாரம் இங்கிலாந்து ஒப்புதல் அளித்து விடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் அவசர கால பயன்பாட்டு அனுமதி கிடைத்து விடும் என தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com