

பனாஜி,
கோவா மாநில முதல்-மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் சமீபத்தில் காலமானார். அதனால், அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பனாஜி தொகுதிக்கு 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக மனோகர் பாரிக்கரின் மூத்த மகன் உத்பல் நிறுத்தப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், உத்பலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. சித்தார்த் குங்கோலியங்கரை பனாஜி தொகுதி வேட்பாளராக பா.ஜனதா மேலிடம் நேற்று அறிவித்தது. இவர், 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார்.
பின்னர், ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா முதல்-மந்திரி ஆக்கப்பட்டதால், அவர் சட்டசபைக்கு போட்டியிட வசதியாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.