

இதனை யுனெஸ்கோ அமைப்பு உலகபுகழ்பெற்ற சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. இங்கு தாமரை மகால் உள்ளது. இதன் அருகில் ராமராயன கோட்டையை சுற்றி கல்லால் ஆன சுற்றுச்சுவர் உள்ளது. இந்த நிலையில் சரியான பராமரிப்பு இல்லாத நிலையில் சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சுற்றுச்சுவரில் ஒரு பகுதி நேற்று காலை திடீரென்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சம்பவம் நடந்த போது அங்கு யாரும் இல்லை. இதனால் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
சேதமடைந்த சுற்றுச்சுவரை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தொல்பொருள் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.