ஊரடங்கு முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும்- சிபிஎஸ்இ

ஊரடங்கு முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ஊரடங்கு முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும்- சிபிஎஸ்இ
Published on

புதுடெல்லி,

ஊரடங்கு காலம் முடிந்த பின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உட்பட சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு , ஏனைய பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. தேர்வுகள் துவங்குவதற்கு 10 நாட்கள் முன்பாகவே தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை மாநில அரசுகள் துவங்க வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com