நடுவானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு; பயணிகள் அலறல்

நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற நபரால் பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.
நடுவானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு; பயணிகள் அலறல்
Published on

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரை நோக்கி தனியார் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 89 பயணிகள் இருந்தனர். விமானத்தின் 1சி இருக்கையில் அமர்ந்திருந்த கவுரவ் என்ற பயணி திடீரென எழுந்து அவசர கதவை நோக்கி சென்றார்.

விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபொழுது, அந்த நபர் அவசர கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை கண்ட பெண் விமான ஊழியர் ஒருவர் உடனடியாக அலறினார். சக பயணிகள் உதவியுடன் அந்நபரை தடுத்து நிறுத்தினார்.

உடனடியாக விமான கேப்டனுக்கு இதுபற்றி தகவல் கொடுத்துள்ளார். இதனால், கேப்டன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலவரம் பற்றி கூறி தரையிறங்க வேண்டும் என கோரியுள்ளார். இதன்பின்பு வாரணாசி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

அதுவரை சக பயணிகள் உதவியுடன் அந்த நபரை பிடித்து வைத்திருந்தனர். விமானத்தில் இருந்த பாதுகாப்பு பணியாளர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபரை இனி விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் பட்டியலில் வைத்திருப்பது பற்றி விமான நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com