சென்ட்ரல் விஸ்டா பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்

சென்ட்ரல் விஸ்டா பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல் விஸ்டா பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்
Published on

புதுடெல்லி,

20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது, பிரதமர், துணை குடியரசு தலைவருக்கு வீடு கட்டுவது உள்ளிட்டவற்றை அடக்கிய சென்ட்ரல் விஸ்டா திட்ட பணிகளை மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவலால் நாடு தத்தளித்து வரும் சூழ்நிலையில் சென்ட்ரல் விஸ்டா பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில், சென்ட்ரல் விஸ்டா பணிகளை தற்காலிகமாக தடை விதிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பணிகளை தொடர்ந்து நடத்த எந்த தடையும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்தும், சென்ட்ரல் விஸ்டா பணிகளை தற்காலிகமாக நிறுத்தக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பிரதீப் குமார் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com