டெல்லி மெஜந்தா லைன் மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவுக்கு கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை

டெல்லி மெஜந்தா லைன் பிரிவில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, வரும் 25 ஆம் தேதி துவக்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை
டெல்லி மெஜந்தா லைன் மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவுக்கு கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் மெட்ரோ ரயில் பாதையை விரிவாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில், ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை 12.5 கி.மீட்டர் தூரம் வரை மெஜந்தா பிரிவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில், வரும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று பிரதமர் மோடி, இந்த பாதையில் ரயில் பாதையை துவக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறும் துவக்க விழா நிகழ்ச்சியில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுடன் கசப்புணர்வு ஏற்பட்டு இருந்த நிலையில், முதல் மந்திரி அலுவலகம் அழைப்பிதழை ஏற்க மறுத்துவிட்டதாக டெல்லி முதல் மந்திரி அலுவலக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், டெல்லி மெட்ரோ ரயிலின் மெஜந்தா பிரிவு ரயில் சேவை துவக்க விழா குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்பான பயணமும் நியாமான கட்டணம் ஆகியவற்றுக்குதான் நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். தற்போது வரை, மெட்ரோ ரயில் துவக்க விழாவிற்கு எங்களுக்கு எந்த ஒரு அழைப்பிதழும் கிடைக்கப்பெறவில்லை என்றார். இதனால், கெஜ்ரிவால் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com