பிரதமர் மோடி நாட்டை உடைக்க முயற்சிக்கிறார்-பரூக் அப்துல்லா

நாட்டின் அரசியலமைப்பின் கீழ் தேசத்தின் அனைத்து மக்களையும் பிரதமர் பாதுகாக்க வேண்டும் என்று பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நாட்டை உடைக்க முயற்சிக்கிறார்-பரூக் அப்துல்லா
Published on

ஸ்ரீநகர், 

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், "நாட்டின் அரசியலமைப்பின் கீழ் தேசத்தின் அனைத்து மக்களையும் பிரதமர் பாதுகாக்க வேண்டும்.

அவர் (பிரதமர்) மக்களை அவர்களின் நிறம், மதம், உணவு அல்லது உடையால் வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. ஆனால் நமது பிரதமர் (மோடி) நாட்டை உடைக்க முயற்சிக்கிறார். அவர் சமீபத்தில் ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியது எனக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com