'அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிப்பது, குடும்பங்களை அழித்துவிடும்' - ராகுல் காந்தி சாடல்

அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிப்பது, குடும்பங்களை அழித்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

அத்தியாவசியமான பல்வேறு உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பது என்று சண்டிகாரில் நடந்த சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "வருமானம் குறைதல், வேலைவாய்ப்பு குறைதல் ஆகியவற்றுக்கு மத்தியில் விலைவாசி உயர்வு முதல் இடத்தில் உள்ளது. பிரதமரின் கப்பார் சிங் வரி, இப்போது கிரஹஸ்தி சர்வநாஷ் வரி ( குடும்பங்களை அழிக்கும் வரி) என்ற வலிமையான வடிவத்தை எடுத்துள்ளது" என கூறி உள்ளார்.

'ஷோலே' படத்தில் கிராமங்களை கொள்ளையடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கப்பார் சிங், இந்தப் பெயரைத்தான் ஜி.எஸ்.டி.க்கு ராகுல் காந்தி பயன்படுத்தி வருகிறார். கொள்ளையடிக்கும் வரி, இப்போது குடும்பங்களை அழிக்கிற வரியாக உருமாற்றம் பெற்றிருப்பதாக ராகுல் காந்தி சாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com