பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மாற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மாற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

அதில், நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றுகிறேன். இடைக்கால் பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. அனைத்து கட்சியினரும் ஒத்த கருத்துடன் பயணிப்பார்கள் என நம்புகிறேன்.

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி  7.5 சதவிகிதக்கும் அதிகமாக உள்ளது. 

உலகின் 5 மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பம் மிக விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரலாறு சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. முத்தலாக் அமல், காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு உள்ளிட்டவை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர். மீதமுள்ள ஏழை மக்களையும் ஏழ்மையில் இருந்து மீட்டெடுக்க முடியும். இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய கைபேசி உற்பத்தி செய்யும் நாடாக வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாப்புத்துறை உற்பத்தில் வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.  பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மாற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com