கேரளாவில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்

மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி எம்.பி. பயபக்தியுடன் வழிபட்டதுடன், துலாபாரம் மூலம் தனது எடைக்கு நிகராக நேந்திரன் வாழைப்பழங்களை நேர்த்திக்கடனாக செலுத்தினார்.
கேரளாவில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
Published on

திருவனந்தபுரம், 

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி கடந்த ஒரு வாரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். மேலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் வயநாட்டுக்கு வந்தனர்.

இந்தநிலையில் பிரியங்கா காந்தி மலப்புரம்-கோழிக்கோடு மாவட்டங்களின் எல்லையான முக்கம் மனாசேரியில் உள்ள ஸ்ரீகுன்னத்து மகாவிஷ்ணு கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தாம்பூல தட்டில் துளசி மாலையுடன் பிரியங்கா காந்தி எம்.பி. மனம் உருகி பயபக்தியுடன் சாமியை வழிபட்டார்.

பின்னர் தனது எடைக்கு நிகராக நேந்திரன் வாழைப்பழங்களை துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.தொடர்ந்து கோவிலில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தேரை பார்வையிட்டார். அப்போது அதில் செய்யப்பட்டுள்ள மர வேலைப்பாடுகளை கண்டு வியந்தார். தொடர்ந்து தேரை வடிவமைத்த சிற்பிகளை சந்தித்து பாராட்டினார். பின்னர் கோவிலை சுற்றி பார்வையிட்டார். அப்போது கோவிலுக்கு வந்த பெண்கள் உள்பட பக்தர்களுடன் பிரியங்கா காந்தி கலந்துரையாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com