

சென்டிரல் விஸ்டா திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்டிரல் விஸ்டா மற்றும் பிரதமரின் வீட்டுக்கான மொத்த செலவு ரூ.20 ஆயிரம் கோடி. இது, 62 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கான செலவு ஆகும். 22 கோடி ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் வாங்குவதற்கு சமம். 10 லிட்டர் ஆக்சிஜன் கொண்ட 3 கோடி சிலிண்டர்களை வாங்கலாம். மொத்தம் 12 ஆயிரம் படுக்கைகள் கொண்ட 13 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு சமம். அப்படி இருக்க ஏன் சென்டிரல் விஸ்டா திட்டத்துக்கு செலவிட வேண்டும்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.