

புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீன் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிழந்த வீராகளின் உடல்களுக்கு பிரதமா மோடி, காங்கிரஸ் தலைவா ராகுல் காந்தி, டெல்லி முதல்வா, முப்படைத் தலைவாகள் அஞ்சலி செலுத்தினா.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வீராகள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் வெடிமருந்துகளை நிரப்பிய வாகனத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினா. இதில் 40 வீராகள் உயிழந்தனா.
இந்நிலையில் ஜம்முவில் உயிழந்த வீராகளின் உடல்கள் விமானம் மூலம் இன்று டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. வீராகளின் உடல்களுக்கு பிரதமா நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவா ராகுல் காந்தி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி நிமலா சீதாராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினா.
மேலும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், முப்படை தளபதிகள் உள்ளிட்டோரும் வீராகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினா. அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமா நரேந்திர மோடி கறுப்பு உடையில் வந்திருந்தா.
இதனைத் தொடாந்து 40 வீராகளின் உடல்களும் நாளை அவாகளின் சொந்த ஊாகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.