அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் பஞ்சாப்பை சேர்க்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்-மந்திரி கடிதம்

அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் பஞ்சாப்பை சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் கடிதம் எழுதி உள்ளார்.
அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் பஞ்சாப்பை சேர்க்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்-மந்திரி கடிதம்
Published on

பஞ்சாப்,

நிலத்தடி நீர்வளத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்காக அடல் பூஜல் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கர்நாடகா, அரியானா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இதற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கி, மத்திய மந்திரிசபை நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமலில் இருக்கும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஞ்ஞான் பவனில் இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாப்பதற்காக ரூ.6 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்க்க வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com