கல்லறையில் 'க்யூஆர் கோடு': இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டிய பெற்றோர்...!

கேரளாவில் இறந்த மகனின் நினைவுகளுக்கு பெற்றோர்கள் உயிரூட்டியுள்ளனர்.
கல்லறையில் 'க்யூஆர் கோடு': இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டிய பெற்றோர்...!
Published on

திருச்சூர்,

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயதே ஆன இளம் மருத்துவர் ஐவின் பிரான்சிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மின்டன் விளையாடி கொண்டிருந்த போது துர்திஷ்டவசமாக உயிரிழந்தார்.

படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு, இசை என அனைத்திலும் சகலகலா வல்லவனாக வலம் வந்த தங்கள் மகனின் பிரிவால் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மிகவும் கவலையில் வாடி வந்தனர். இதனால் மறைந்த தனது மகனின் திறமைகளை உலகறிய செய்ய விரும்பினர்.

அதன்படி, தனது தம்பி குறித்த தகவல்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக அவரின் கல்லறையில் 'க்யூஆர் கோடு' பதிக்க அவரது அக்கா யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி, தங்கள் மகனின் கல்லறையில் 'க்யூஆர் கோடு' பதித்தனர். இதனால் அவரின் நினைவூகளுக்கு பெற்றோர் உயிரூட்டி இருக்கிறார்கள்.

இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டும் விதமாக மகனின் கல்லறையில் அவரை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக க்யூஆர் கோடு வைத்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com