யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற கேரள பழங்குடியின பெண்ணுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற கேரள பழங்குடியின பெண்ணுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற கேரள பழங்குடியின பெண்ணுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கமலம். ஆதிவாசிகளான இவர்களது மகள் ஸ்ரீதன்யா (வயது 26). கரையான் அரித்த ஓலை கூரை வீட்டில் வசித்தபோதும் ஸ்ரீதன்யாவுக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்று தீராத தாகம் இருந்தது. கல்வியை நன்கு கற்று வந்தார். மகளின் ஆர்வத்துக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுத டெல்லி செல்ல வேண்டும். ஆனால் டெல்லி செல்ல பணம் இல்லை. ஸ்ரீதன்யா பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் கூலி வேலை செய்து வந்தார் ஸ்ரீதன்யா, சமீபத்தில் மின்சாரம் தாக்கி ஸ்ரீதன்யா தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடது கை எலும்பு முறிந்தது. இந்தநிலையில் சிவில் சர்வீல் தேர்வு முடிவு வெளியானது. இதில் ஸ்ரீதன்யா, 410 ரேங்க் பெற்று வெற்றி பெற்றார். வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் கலெக்டர் ஆவது இதுவே முதல்முறை. இதனால் ஆதிவாசி மக்கள் ஸ்ரீதன்யா வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஸ்ரீதன்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அவரது அர்ப்பணிப்பும் கனவை நினைவாக்க உதவியுள்ளது. தான் தேர்வு செய்யும் பணியில் மிகப்பெரும் வெற்றியை பெற ஸ்ரீதன்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஸ்ரீதன்யாவை, நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். பினராயி விஜயன் தொடர்ந்து வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், சமுதாயத்தில் பின் தங்கிய நிலையை எதிர்த்து ஸ்ரீதன்யா போராடி வெற்றி கண்டுள்ளார். அவரது சாதனை பிற மாணவர்களுக்கும் வரும் காலத்தில் ஊக்கமளிப்பதாய் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com