ரே‌ஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்பட 40 சேவைகள்- ஆம் ஆத்மி அரசின் புரட்சிகர திட்டம் தொடக்கம்

ரே‌ஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்பட 40 வீடு தேடிவரும் சேவைகள் கொண்ட டெல்லி ஆம் ஆத்மி அரசின் புரட்சிகர திட்டம் தொடங்கியது.
ரே‌ஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்பட 40 சேவைகள்- ஆம் ஆத்மி அரசின் புரட்சிகர திட்டம் தொடக்கம்
Published on

புதுடெல்லி,

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய திட்டத்தை நேற்று முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார். அதன்படி ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், திருமண பதிவு சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், குடிநீர் இணைப்பு போன்ற 40 வகையான சேவைகள் டெல்லி மக்களின் வீடு தேடிவரும்.

இதற்காக வழங்கப்பட்டுள்ள 1076 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு மக்கள் தங்களுக்கு தேவையானதை பதிவு செய்ய வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்தில் இருந்து ஒருவர் வீட்டுக்கு வந்து அதற்கு தேவையான தகவல்களை பெற்றுச்செல்வார். பின்னர் அவர் கேட்ட சான்றிதழ் அவரது வீட்டுக்கே சென்று வழங்கப்படும்.

இது அரசு நிர்வாகத்தில் ஒரு புரட்சிகர மாற்றம் என்றும், ஓரிரு மாதங்களில் இந்த திட்டத்தில் மேலும் 30 சேவைகள் சேர்க்கப்படும். 3 மாதங்களில் 100 சேவைகள் இதில் கிடைக்கும் என்று முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மேலும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com