

பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் சென்னென்னஹள்ளி பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் அதன் தலைவர் மோகன் பகவத், தேசிய இணை செயலாளர் மன்மோகன் வைத்யா மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வைத்யா, கொரோனா பெருந்தொற்று காலத்தில் 73 லட்சம் பேருக்கு ரேசன் பொருட்களும் மற்றும் 45 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்களும் வழங்கியுள்ளோம். சங்கத்தின் நெட்வொர்க்கை நாங்கள் விரிவுப்படுத்தி வருகிறோம்.
90 லட்சம் முக கவசங்களை நாங்கள் வினியோகித்து உள்ளோம். 60 ஆயிரம் யூனிட்டுக்கும் கூடுதலான ரத்தம் நன்கொடையாக வழங்கியுள்ளோம். 20 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உதவியுள்ளது.
2.5 லட்சம் பேர் வரையிலான நாடோடிகளாக உள்ளவர்களுக்கும் உதவி செய்துள்ளோம் என அவர் கூறியுள்ளார். எனினும், சங்க கூட்டத்தில் அரசியல் விவகாரங்கள் பற்றிய ஆலோசனை எதுவும் இடம் பெறாது என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.