ஜியோ ஏர்ஃபைபர் சேவை செப் 19-ஆம் தேதி அறிமுகம் - ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

“JIO Air Fiber” எனும் புதிய திட்டத்தை செப்டம்பர் 19-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜியோ ஏர்ஃபைபர் சேவை செப் 19-ஆம் தேதி அறிமுகம் - ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு
Published on

மும்பை,

இந்தியாவின் முன்னனி தனியார் நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ஒன்று. பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானி பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46வது ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கடந்த நிதியாண்டில் புதிதாக 2 லட்சத்து 60 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கிய ஜியோ 5ஜி சேவை பெருநகரங்களில் 96 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் டிசம்பருக்குள் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் எனவும் கூறினார். ஒரு நபர் சராசரியாக மாதத்திற்கு 25 ஜி.பி. ஜியோ டேட்டாவை பயன்படுத்துவதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. "JIO Air Fiber" எனும் புதிய திட்டத்தை செப்டம்பர் 19-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கேபிள்கள் இல்லாமல் காற்றின் வழியே அதிவேக இணைய சேவையை இதன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ஏர் பைபர் என்பது கேபிள் இல்லாமல் அல்ட்ரா வேகத்தில் இணைய சேவையை வழங்கும் முறையாகும். இதுவரை எந்த நிறுவனமும் அளிக்காத அளவுக்கு அதிவேகமான இணையத்தை இதன் மூலம் பயன்படுத்த முடியும். பைபர் சேவையை பயன்படுத்துவதற்கு கேபிள்கள் தேவையாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com