குடியரசு தினவிழா கோலாகலம்; 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!!

73வது குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினவிழா கோலாகலம்; 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!!
Published on

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று தலைநகர் டெல்லியில் 73வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலை 10.30 மணியளவில் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

முன்னதாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படைகளின் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பின் மரியாதையை தேசியக் கொடி ஏற்றிய பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

மேலும், குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, நாட்டின் பண்பாட்டை பறை சாற்றும் கலைநிகழச்சிகள் நடைபெற்று வருகின்றன. முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து சென்று வீரசாகசங்களை வானில் நடத்திக்காட்ட உள்ளன.

குடியரசு தினவிழா அணிவகுப்பை கண்டுகளிக்க ஏதுவாக ராஜபாதையின் இரு புறங்களிலும் 10 எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய சவால்களுக்கு இடையே இந்த விழாவையொட்டி பல அடுக்கு பாதுகாப்புடன் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com